நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா உரையாற்றுவதில் சிக்கல்
நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை இருப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.01.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களினது நாடளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது.
சபாநாயகரின் அறிவுறுத்தல்
இந்நிலையில், இராமநாதன் அர்ச்சுனா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தலை சபாநாயகர் வழங்கியபோதும், அதற்கான நடவடிக்கையை சஜித் பிரேமதாச எடுக்கவில்லை என அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், தான் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்தது மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்வதற்கு இல்லை என தெரிவித்த அர்ச்சுனா, தனக்கு உரையாற்றச் சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் நாடாளுமன்றம் வந்தும் பயனற்ற நிலைமை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க, இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்ட தரப்புகள் கலந்துரையாடி இருப்பதாகவும், இந்த விடயத்தில் சபாநாயகரின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri