ரணிலின் வரவு செலவுத் திட்டத்தையே புதிய அரசாங்கமும் பின்பற்றும்
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கொள்கைகளுக்கு அமையவே புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வகுத்த கொள்கைகளுக்கு அமையவே தற்போதைய அரசாங்கமும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிப்பதில் கால தாமதம்
இந்த கொள்கைகளுக்கு புறம்பான வகையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தால் நாட்டு மக்கள் மீண்டும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் நாடு பாரிய அளவில் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் காலம் தாழ்த்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு காலம் தாழ்த்துவதால் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri