வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு
இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
மேலும், கார்களை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, தடை/கட்டுப்பாட்டை தொடர இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர் மேலும், 2,000க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டு, அவ்வப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
You May Like This Video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri