வாகன இறக்குமதி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனூடாக அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள எந்த இலக்குகளையும் அடைய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி
அந்த சங்கம் மேலும் தெரிவிக்கையில், 2020 மார்ச் 20 முதல் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அதன் பிறகு 4 முதல் 5 ஆண்டுகளாக எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.
1000 வாகனங்களின் இறக்குமதி
முதலாவது விடயம் என்னவென்றால் சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம்.

தற்போதுள்ள நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது புத்தம் புதிய முகவர்களுக்கு மாத்திரமே, 1000 வாகனங்கள், அதாவது பேருந்துகள் மற்றும் வான்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஆயிரக்கணக்கான மற்ற இறக்குமதியாளர்கள் அனைவரும் வெட்டி விடப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri