உதிரிப்பாகங்களைக் கொண்டு பொருத்தப்பட்ட வாகனம்! ஒருவர் கைது
இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட வாகன உதிரி பாகங்களைக் கொண்டு பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம்(29.5.2026) இரவு கொட்டாவ பொலிஸ் பகுதியில் மேற்கு மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாக அந்த ஜீப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், செல்லுபடியாகும் வருமான வரி சான்றிதழ், காப்புறுதிச் சான்றிதழ் அல்லது புகை உமிழ்வு சோதனை அறிக்கை இல்லாமல் அது பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீரப்பால் கபில பெரேராவின் திடீர் தீர்மானம்
மேலதிக விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு வாகனம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வித்தாரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் மேற்கு மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan