நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Economy of Sri Lanka National People's Power - NPP NPP Government
By Sajithra May 30, 2026 05:52 AM GMT
Report

இலங்கையில் அடுத்த தலைமுறைத் தலைவர்களைக் கண்காணித்தல் என்ற தலைப்பில் இலங்கை தொடர்பில் முக்கிய ஆய்வு ஒன்றினை அமெரிக்காவிலுள்ள ஆசியாவின் தேசிய ஆராய்ச்சி பணியகம் நடத்தியுள்ளது. 

குறித்த ஆய்வில், தேசிய மக்கள் ஆட்சியை தொடர்ந்த இலங்கையின் அடுத்த தலைமுறை, வரலாற்று ரீதியான வெளியுறவு மரபுகளை விட நாட்டின் பொருளாதார உயிர்வாழ்விற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த ஆய்வுக்கட்டுரையின்படி, 2002ஆம் ஆண்டில் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் ஏற்பட்ட எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை, ஒரு பிரம்மாண்ட மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!

மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!

பாரிய மாற்றம்.. 

இது அப்போதைய கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலக கட்டாயப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஓர் இடைக்கால அரசாங்கம் அமைந்தது.

நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல் | Economy Of Sri Lanka Anura Kumara Dissanayake

இதற்கிடையில், "முறைமை மாற்றம்" (System Change), வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, JVP தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) 2024இல் நவம்பரில் ஆட்சிக்கு வந்தது.

2026 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் பொருளாதாரக் குறிகாட்டிகள் மெதுவாக சீரடைந்தன. (பணவீக்கம் 70 வீதம் என்ற உச்சத்திலிருந்து 5வீதத்துக்கும் குறைவாகக் குறைந்தது; வேலையின்மை 3.8 வீதமாகக் குறைந்தது.அந்நியச் செலாவணி இருப்பு சுமார் 6 பில்லியன் டாலர்களை எட்டியது).

இருப்பினும், வறுமை நிலை இன்னும் முழுமையாக மீளவில்லை. அத்துடன் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம், மீண்டும் எரிபொருள் மற்றும் உரப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், 2026ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 26 முறைசாரா நேர்காணல்களின் அடிப்படையில், புதிய அரசியல் தலைவர்கள் உலகின் முக்கிய வல்லரசுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தொடர்பிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, இலங்கையின் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவை ஒரு தவிர்க்க முடியாத புவியியல் யதார்த்தமாகப் பார்க்கிறார்கள், எனவே அதனுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணுவது அவசியம் என கருதுகின்றனர்.

நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் இந்தியா வழங்கிய 4 பில்லியன் டொலர் நிதியுதவியும், தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக போக்குவரத்துச் சபையில் சுமார் 500 சாரதிகள் இடைநீக்கம் !

ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக போக்குவரத்துச் சபையில் சுமார் 500 சாரதிகள் இடைநீக்கம் !

பொருளாதார சீர்நிலை 

அத்துடன், தமிழ் அரசியல் கட்சிகள் பாதுகாப்புக் காரணங்களை ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவின் ஆதிக்கப் போக்கு குறித்து எச்சரிக்கின்றன. இடதுசாரி ஆர்வலர்கள் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் இரகசியத்தன்மையையும், அதானி குழுமம் போன்ற பெரிய இந்திய நிறுவனங்கள் உள்ளூர் வளங்களை ஆக்கிரமிப்பதையும் விமர்சிக்கின்றனர்.

நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல் | Economy Of Sri Lanka Anura Kumara Dissanayake

அதேநேரம், இடதுசாரி அமைப்புகள் IMF திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றன; இது அமெரிக்காவின் கடன் வலையாகும் என்று கூறும் அவர்கள், அதற்குப் பதிலாக 'பிரிக்ஸ்' (BRICS) அமைப்போடு இணைய வேண்டும் என வாதிடுகின்றனர்.

மனித உரிமைகள் மற்றும் உள்நாட்டுப் போர் விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவின் தலையீடுகளை சிங்கள பௌத்த தேசியவாதிகள் தொடர்ந்து சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர் என ஆய்வு கூறுகின்றது. 

முடிவாக, நடுநிலைமை போன்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பழைய தலைமுறை தந்திரோபாயவாதிகளைப் போலல்லாமல், இலங்கையின் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வெளியுறவுக் கொள்கையை ஒரு யதார்த்தமான/நடைமுறைப் பார்வையில் (realist/pragmatic lens) அணுகுகின்றனர்.

பாரம்பரிய அரசியல் கொள்கைகளின் வீழ்ச்சி, சர்வதேச அரசியலில் நிலவும் "வல்லமை உள்ளவனுக்கே அதிகாரம்" (might makes right) என்ற உண்மை நிலை, மற்றும் தொடர்ச்சியான உள்நாட்டு பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை, வரலாற்று ரீதியான வெளியுறவு மரபுகளை விட நாட்டின் பொருளாதார உயிர்வாழ்விற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த இளம் தலைமுறையினருக்கு உணர்த்தியிருக்கிறது என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US