ஒழுங்காற்று நடவடிக்கை காரணமாக போக்குவரத்துச் சபையில் சுமார் 500 சாரதிகள் இடைநீக்கம் !
பல்வேறு ஒழுங்குப் பிரச்சினைகள் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையில் சுமார் 400 முதல் 500 சாரதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவர்களில் சிலர் இன்னும் தங்கள் சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
பல்வேறு சட்டச் சூழ்நிலைகளின் கீழ் நடைபெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர்களில் சிலர் தனியார் பேருந்துகளை ஓட்டி மேலதிக வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு, தேவையான சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெறவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முறைகளை மறுபரிசீலனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் முடிவுகளை நாம் கேள்விக்குட்படுத்தவே முடியாது! முன்னாள் ஜனாதிபதி மகிந்த வலியுறுத்து
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri