அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka NPP Government High Court of Sri Lanka
By Sajithra May 30, 2026 10:34 AM GMT
Report

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து கபில பெரேரா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதே அமைச்சில் பணியாற்றிய சிரேஷ்ட பொது நிர்வாக அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்கு எதிராக கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே இந்த உடனடி பதவி விலகலுக்கு நேரடிக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தான் பதவியிலிருந்து விலகும் முடிவை கபில பெரேரா பொது நிர்வாக அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், இது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீண்டகாலம் பணியாற்றிய இவர், மீண்டும் கல்விச் சேவைக்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கான மகிழ்ச்சி தகவல்

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கான மகிழ்ச்சி தகவல்

அநீதி இழைக்கப்பட்டதா.. 

நாட்டின் உண்மையான நிர்வாகப் பொறுப்பு தகுதிவாய்ந்த பொது நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், ஆட்சி மாற்றங்களின் போது தமக்கு இணக்கமானவர்களை நியமிக்கும் பாரம்பரிய அரசியல் முறை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் போதும் தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல் | Kapila Perera Resigns As Transport Secretary

இவ்வாறிருக்கையில், நிர்வாக அதிகாரி அல்லாத சனத் நந்தன குமாரநாயக்க ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், துறைமுகங்களின் மேலாண் பணிப்பாளராக இருந்த பிரபாத் மாலவிகே மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த அரசியல் சூழலில், நிர்வாகச் சேவையைச் சேராத கபில பெரேரா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குக் கீழ் பணியாற்றிய 30 வருட முதிர்ந்த அனுபவம்கொண்ட விசேட தர நிர்வாக அதிகாரியான டபிள்யூ.எஸ். சத்யானந்தா தனது பதவியை இழக்கும் அநீதியை எதிர்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த  சத்யானந்தா, ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொது நிர்வாக அமைச்சின் இருப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.

மின்சாரம் - எரிபொருள் செலவினத்திற்கேற்ற விலை நிர்ணயம்.. ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

மின்சாரம் - எரிபொருள் செலவினத்திற்கேற்ற விலை நிர்ணயம்.. ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

முக்கிய உயர் அதிகாரி..

அதன்பிறகு, 2024 டிசம்பர் 10 அன்று, பொதுச் சேவை ஆணைக்குழுவின் தற்காலிக ஒப்புதலுக்கு உட்பட்டு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல் | Kapila Perera Resigns As Transport Secretary

தான் டிசம்பர் 18 அன்று புதிய பதவியில் பொறுப்பேற்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்த சத்யானந்தா, இது குறித்து அமைச்சின் செயலாளர் கபில பெரேராவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தெரிவித்து, சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோரியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 

எவ்வாறாயினும், அன்று மதியம் சத்யானந்தாவின் உத்தியோகபூர்வ அறைக்கு சென்ற அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கோபமாகவும் தன்னிச்சையாகவும் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அச்சந்திப்பின் போது "இங்கு உங்களது சேவை தேவையில்லை" என்று கூறி, உடனடியாக அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு சத்யானந்தாவுக்கு கபில பெரேரா உத்தரவிட்டதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. 

உயர் மட்ட அரச அதிகாரி ஒருவருக்கு முற்றிலும் பொருத்தமற்ற இந்த செயலால் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக கூறி சத்யானந்தா, அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

ஜனாதிபதி அநுர குமார வெளியிட்டுள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி அநுர குமார வெளியிட்டுள்ள வெசாக் தின வாழ்த்துச் செய்தி

நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு 

தனது அடிப்படை மனித உரிமைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது என, இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் சத்யானந்தா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல் | Kapila Perera Resigns As Transport Secretary

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபயசேகர, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் இணக்கத்துடன் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். 

தீர்ப்பில், ஒரு மேலதிக செயலாளரை நியமிப்பதற்கான முழுமையான அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது என்றும், அந்த முடிவில் சட்டவிரோதமாக தலையிடுவது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சின் செயலாளர் கபில பெரேராவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சியை கடுமையாக மீறுவதாகும் என்றும், அரசியலமைப்பின் 12(1) பிரிவின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட "சட்டத்தின் முன் சமத்துவம்" என்ற அடிப்படை மனித உரிமையை அவர் நேரடியாக மீறியுள்ளார் என்றும் உயர் நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வரும்போது சத்யானந்தா ஓய்வு பெற்றிருந்ததாலும், தான் இழந்த தொழில்முறை மரியாதையை பணத்தால் மதிப்பிட முடியாது என்று அவர் கூறியதாலும் நீதிமன்றம் இழப்பீடு எதுவும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தே கபில பெரேரா தனது பதவியை தற்போது பதவி விலகல் செய்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி - இந்தியத் தூதரகத்துடன் அவசரத் தொடர்பு

காணாமல்போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி - இந்தியத் தூதரகத்துடன் அவசரத் தொடர்பு

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US