இஸ்ரேலின் பேருந்து தரிப்பிடத்தின் மீது மோதிய வாகனம் : விசாரணைகள் தீவிரம்
இஸ்ரேலின் (Israel) டெல் அவிவ் அருகில் உள்ள சந்திப்பகுதியில்,பேருந்து நிறுத்தத்தின் மீது நேற்று (27) கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ஒருவர் கொல்லப்பட்டதோடு 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் படையினரும் அடங்குகின்றனர்.
இந்தநிலையில் இது பயங்கரவாத தாக்குலாக இருக்கலாமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு பாதுகாப்பின் தீவிரத்தன்மை
இராணுவ தளத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
தாக்குதல் நடத்தியவர் மத்திய இஸ்ரேலில் உள்ள கலன்சாவே பகுதியைச் சேர்ந்த இஸ்ரேலிய அரேபியர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம், இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பின் தீவிரத்தன்மையை உணர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
