ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் கவனம் செலுத்த கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லோயிட் ஒஸ்டின்(Lloyd Austin) வெளியிட்டுள்ள கருத்தின்படி,
இஸ்ரேல் பாதுகாப்பு
“இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை ஈரான் நடத்த கூடாது. அது போன்ற தவறு இடம்பெறகூடாது.

தனது நாட்டை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது” என கூறியுள்ளார்.
ஈரானின் நலன்கள்
இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி(Abbas Araghchi) ''ஈரானுக்கு அதன் நலன்கள், அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதில் எந்த வரம்புகளும் இல்லை" என பதில் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அவ்வாறு ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam