இஸ்ரேலின் தாக்குதலை குறைத்து மதிப்பிட கூடாது: ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை குறைத்து மதிப்பிட கூடாது என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei) சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்கு(Iran) எதிரான நடவடிக்கைகளின் தாக்கங்களை இஸ்ரேல் நீடிக்க விரும்பும் அதே வேளையில், தமது நாட்டின் திட்டமிடல்களை நிராகரிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அலி கமேனி,
இஸ்ரேல் தாக்குதல்
"ஈரானைப் பொறுத்தவரை இஸ்ரேல் தவறான கணக்கீடு செய்கிறார்கள்.
ஈரானிய மக்களின் ஆற்றல், திறன், புத்தி கூர்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை அவர்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
பின்னடைவைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக ஈரான் ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நம்புபவர்கள் தவறானவர்கள்.
போர் விதிகள், சட்டங்கள்
போர் என்பது விதிகள், சட்டங்கள் மற்றும் வரம்புகளின் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. ஒரு போரின் போது இந்த வரம்புகளை புறக்கணிக்க முடியாது.
இருப்பினும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை ஆளும் எதிரி கும்பல் அனைத்து எல்லைகளையும் விதிகளையும் காலடியில் மிதித்துள்ளனர்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |