போர் புரிய விருப்பமில்லை: டொனால்ட் ட்ரம்ப்
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை வாங்குவதற்குத் தாம் உடனடிப் பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்தார்.
உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ள டாவோஸ் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது "அளவற்ற வலிமையையும் ராணுவத்தையும் பயன்படுத்தினால் எங்களை எவராலும் தடுக்க முடியாது, ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். எனக்குப் போர் புரிய விருப்பமில்லை, எனவே நான் பலத்தைப் பயன்படுத்த மாட்டேன்" என்று ட்ரம்ப் கூறினார்.
இறக்குமதி வரி
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தனது உரையில், ட்ரம்ப் பலமுறை கிரீன்லாந்தையும் ஐஸ்லாந்தையும் குழப்பிக் கொண்டு பேசியமை அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது 10% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
ட்ரம்பின் இந்தப் பேச்சு குறித்து லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியின் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.
முடிவெடுக்கும் அதிகாரம்
கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கும் டென்மார்க்கிற்கும் மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. சீன காற்றாலை பண்ணைகள், பணவீக்கம் மற்றும் வடகடல் எரிசக்தி நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் குறித்தும் ட்ரம்ப் தனது உரையில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri