நாட்டில் வறுமையில் வாடுவோர் தொடர்பில் திஸ்ஸ விதாரணவின் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு..
இலங்கையில் எழுபது சதவீதம் பேர் வறுமையில் வாடுவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் உரையாற்றிய அவர்,
நாட்டில் மற்றும் உலகத்தில் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவை சில நாடுகளை பொருளாதார,அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரணங்களை கொண்டு இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட கணிப்பீட்டு அறிக்கையில் நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் தொகை 35 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் வைத்திய பரிசோதனை ஸ்தாபனத்தின் கணிப்பீடுகளில் அது இரு மடங்காக அதாவது 70 சதவீதமாக உள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri