இரு கட்சிகளின் இணைப்பு சாத்தியப்படுமா!..திஸ்ஸ அத்தநாயக்க கிளப்பும் சர்ச்சை
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) இணைவது பெரும் சவாலாக மாறியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (20.01.2026) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
எதிர்காலத் திட்டங்கள்
எதிர்காலத்தில் இணைப்பு தொடர்பில் இரு கட்சித் தலைவர்களும் ஒரு முடிவுக்கு வருவார்கள். பொதுமக்கள் எதிர்பார்க்கும் நிலையை அடைய இரு கட்சித் தலைவர்களுக்கும் சிறிது காலம் வழங்கப்பட வேண்டும்.
ஒன்றிணைவதற்கான ஆரம்ப படி கூட்டணி அரசியலாகும்.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான பிளவு காரணமாக கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பாதிக்கப்பட்டன.

எனவே, கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் கூறினார்.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri