இஸ்ரேலின் தீவிர தாக்குதல்: ஈரான் வெளியிட்ட அறிக்கை
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்களளை தனது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் - தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலாம் மாகாணங்களில் உள்ள இராணுவ இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக ஈரானிய வான் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி, சனிக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள இராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியிருந்தது.
ஈரானிய தகவல்கள்
இந்நிலையில், தாக்குதல் ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதல்களை நிறுத்தியதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தற்காப்புக்காக ஈரானிலுள்ள இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் தனது இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டின் இராணுவ தரப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரான் அரசு புதிய தாக்குதல்களை நடத்தி மோதல்களைப் பெரிதாக்க வேண்டுமென்று நினைத்தால் இஸ்ரேல் அதற்கு பதிலடி தர நேரிடும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
