மருத்துவமனைக்கு அடியில் தங்க சுரங்கம் அமைத்துள்ள ஹிஸ்புல்லா: இஸ்ரேல் குற்றச்சாட்டு
லெபனானின் ஹால் - சேயில் மருத்துவமனையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பாரியளவான தங்கங்கள் மற்றும் பல மில்லியன் பெறுமதியான டொலர்களை பதுக்கிவைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு,
ஹிஸ்புல்லாவின் தங்கசுரங்கம்
''லெபனானின் ஹால் - சேயில் மருத்துவமனைக்கு அடியில் ஹிஸ்புல்லாவின் தங்கசுரங்கம் ஒன்று உள்ளது.
அங்கு அவர்களின் பாரிய பதுங்குகுழி ஒன்றும் உள்ளது. மேலும், தெற்கு பெய்ரூட்டின் தஹியே இலக்குகள் மீது மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ஹிஸ்புல்லா ஆயுத உற்பத்தி நிலையங்கள் தாக்கி அளிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை தகவலுக்கு அமையவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |