ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்த தலைவாக கருதப்படும் மதகுருவான ஹசேம் சஃபிதீன் தாங்கள் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹசேம் சஃபிதீன் என்ற இந்த மதகுரு உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலுடன் போராடும் ஹிஸ்புல்லா, சஃபிதீனின் மரணத்தை இதுவரையில், உறுதிப்படுத்தவில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பு
இதன்படி ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னைய தலைவரான நஸ்ரல்லா செப்டம்பர் 27 அன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மேலும், ஒக்டோபர் 4ஆம் திகதியன்று நகரின் விமான நிலையத்திற்கு அருகே வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தாம், சஃபிதீனுடனான தொடர்பை இழந்துவிட்டதாக ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri