அஷேன் தாக்கல் செய்த மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொதுத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி சமூக ஊடக ஆர்வலர் அஷேன் சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தனது வேட்புமனுவை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து கொழும்பு மாவட்ட தேர்தல் அதிகாரி, மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக கடந்த 16ஆம் திகதி அவர் உயர் நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
குறித்த மனு தொடர்பிலான விசாரணை இன்று(23.10.2024) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வேட்புமனுவைப் பெறும் நடவடிக்கை
அஷேன் சேனாரத்னவின் வேட்பு மனு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் அதை நிராகரித்ததாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வேட்பு மனு கையளிக்கப்படும் போது தாம் அந்த இடத்திலேயே தங்கியிருந்ததாகவும், வேட்புமனுவைப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை அமர வைத்து, அதற்கான விண்ணப்பப் படிவத்தை வேறு ஒருவரிடமிருந்து பெற்றுக் கொண்டதாகவும் அஷேன் சேனாரத்ன முன்வைத்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத அரசியல் கரம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக அஷேன் ஷெனாரத்ன ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்மையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |