ஈரான் - இஸ்ரேல் மோதல்: மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கை
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றத்தை தனிக்க கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியாட் ஆஸ்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உடன் ஆஸ்டின் நடத்திய பேச்சுவார்த்தையின்போதே இதனை அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க இராணுவம் தொடர்ந்து பிராந்தியத்தில் மேம்பட்ட இருப்பைக் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வீரர்கள்
மேலும், “ஈரான் ஆதரவு தாக்குதல் அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அமெரிக்க வீரர்கள் , இஸ்ரேல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள பங்காளிகளைப் பாதுகாக்க மேம்பட்ட படை நிலைப்பாட்டை பராமரிப்பார்கள்.

இந்த பதற்ற நிலையை அமெரிக்கா மேம்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்’’ என லியாட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், ஈரானின் இராணுவ தளங்களைத் மாத்திரம் தாக்கியமைக்கும், எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைக்காமைக்கும் அமெரிக்க அழுத்தம் காரணமாக இருக்கலாம் என சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri