அமெரிக்கா, பலாத்காரமாக கிரீன்லாந்தை கைப்பற்றுமா! டிரம்ப் விளக்கம்
பலாத்காரமான அடிப்படையில் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோசில் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கிரீன்லாந்து தொடர்பாக தெரிவித்த கருத்துகள், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கிரீன்லாந்தை கட்டுப்படுத்துவதற்கு பலத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை டிரம்ப் வெளிப்படையாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் டிரம்ப் எடுத்த கடுமையான அணுகுமுறைகளை கவனித்து வந்த கிரீன்லாந்து மக்கள், ஒருநாள் அமெரிக்க கடற்படையினர் தங்களது கரைகளில் இறங்கக்கூடும் என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்த பின்னணியில், பலத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற டிரம்பின் அறிவிப்பு, ஒரு அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
எனினும், அவரது முந்தைய நடவடிக்கைகள் மற்றும் கடுமையான வெளிநாட்டு கொள்கை அணுகுமுறை காரணமாக, கிரீன்லாந்து மக்களிடையே முழுமையான நம்பிக்கை இன்னும் உருவாகவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri