இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேலின் தாக்குதலுக்கு தகுந்த நேரத்தில் பதிலளிக்கும் உரிமை ஈரானுக்கு இருப்பதாக அந்நாட்டின் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி தெரிவித்துள்ளார்.
ஈரானின் தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலம் ஆகிய நகரங்களின் மீது இஸ்ரேல் நேற்றையதினம் (26.10.2024) வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், காசா மற்றும் லெபனானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க போர் நிறுத்தம் அவசியம் என மௌசவி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
மேலும், பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு துணை போகும் அமெரிக்காவை எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தம், காசா மற்றும் லெபனானில் வாழும் அப்பாவி உயிர்களையே அதிகளவில் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |