மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் காயம்
மட்டக்களப்பு - கல்முனை(Batticaloa) பிரதான வீதி குருக்கள்மடம் பகுதியில் கெப் ரக வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (02.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கெப் ரக வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் அருகிலிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 பாரிய மின்கம்பங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் மோதிய கெப் ரக வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் உயிரி பிழைத்ததாகவும் சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam