இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து (India) சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் புத்தளம் (Puttalam) பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (02.04.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் (Puttalam) மாம்புரி பகுதியிலிருந்து மதுரங்குளி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கொண்டு செல்ல உள்ளதாக புத்தளம் பிராந்திய மூத்த கண்காணிப்பு பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மாம்புறி திடல் பகுதியில் லொறியினை மறைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது 49 உரைகளில் 1435 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுரங்குளிப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியன நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri