நாட்டில் தக்காளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான காரணம்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் (Dambulla economic centre) ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகக் குறைந்திருந்தாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நிலையத்தில் வியாபாரிகள் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததாலேயே விலை பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காய்கறிகளுக்கான தேவையும் குறைவு
தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாகக் குறைந்திருந்த போதிலும், நேற்று (17) புறக்கோட்டை காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ போஞ்சியின் விலை 40 ரூபா வரையும், ஒரு கிலோ முள்ளங்கியின் விற்பனை விலை 35 ரூபா வரையும், ஒரு கிலோ கெக்கரி மற்றும் வெள்ளரிக்காயின் விற்பனை விலை 20 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை, ஒரு கிலோ பீக்கங்காயின் விலை 40 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய், பயிற்றங்காய், பொலஸ் மற்றும் புடலங்காய் ஆகியவற்றின் மொத்த விலை தலா 50 ரூபாவாகவும் குறைந்துள்ளன.
நேற்று புறக்கோட்டை (Petta) சில்லறை விற்பனைச் சந்தையில் காய்கறிகளுக்கான தேவையும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri