பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டு மக்களுக்கு சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்
துளையிடுதல், ஆற்றங்கரை அரிப்பு, தொழிற்சாலை கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் அனைத்து பாதிப்புகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அழிவு தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் பொலிஸ் மா அதிபரால் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
