வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலை
தற்போது ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 750 ரூபாயாகவும், பீட்ரூட்டின் விலை 380 ரூபாவாகவும், கோவாவின் விலை 500 ரூபாவாகவும், போஞ்சியின் விலை 600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
அத்துடன், லீக்ஸ் மற்றும் தக்காளி உள்ளிட்ட ஏனைய மரக்கறிகளின் விலையும் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
அதேநேரம் மரக்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் காய்கறிகளை வாங்க வருவதில்லை என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவிலும் விலை அதிகரிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.
அதன்படி கோவா ஒரு கிலோகிராம் 470 முதல் 490 ரூபா வரையிலும், கரட் ஒரு கிலோகிராம் 660 முதல் 680 ரூபா வரையிலும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 350 முதல் 370 ரூபா வரையிலும், தக்காளி ஒரு கிலோகிராம் 400 முதல் 450 ரூபா வரையிலும், போஞ்சி ஒரு கிலோகிராம் 600 முதல் 650 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இருப்பனும் மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், கடந்த காலம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - செ.திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |