வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விடுதலை கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் மத வழிபாட்டை உறுதி செய்யுமாறும் கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (17.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்களின் ஒரு விடயமாகவே வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவன் ராத்திரி தினத்தன்று(08) வழிபாட்டுக்கு சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே கவலைக்குரிய ஒரு விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். ஏனெனில் மத வழிபாடு என்பது மத உரிமை என்பது எங்களுடைய இலங்கை யாப்பின் முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.
ஆனால் அதற்கு ஒரு தடை போடும் விடயமாகவே நாங்கள் இதனை கருதுகின்றோம். அரசாங்கம் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயதில் பூஜை நேரத்தின்போது நடைபெற்ற அடக்குமுறைக்கு எதிராகவும் அதன்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மத வழிபாட்டு இறைமையை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஊடகம் மூலம் கண்டனத்தை தெரிவிப்பது தொடர்பான குறித்த செய்தியாளர் சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இந்து சமய தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன்போது கருத்து வெளியிடுகையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதற்காக
இலங்கை அரசு ஏன் மௌனம் சாதிக்கிறது இதனை ஒருபோது ஏற்க முடியாது என
தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |