பாகிஸ்தானுக்கு உளவுக்கப்பலை வழங்கிய சீனா
பாகிஸ்தான் கடற்படையினருக்கு முதல் உளவு கப்பலை உருவாக்குவதற்கு சீனா அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீட்டர் நீளமுள்ள குறித்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பதற்கும், உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா கடும் எதிர்ப்பு
நவீன வசதிகள் கொண்ட இது போன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த கப்பலை சீனா வழங்கி உள்ளது.
ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்திய நிலையில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |