பாகிஸ்தானில் ஈரான் ஆதரவுப் போராட்டம்: வன்முறையில் 16 பேர் பலி
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் வடக்கு நகரமான கில்கிட்டில் (Gilgit) நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக மீட்புப்பணி அதிகாரி ஜாகிர் ஷா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல், பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திலும் பெரும் வன்முறை வெடித்தது.
உயிரிழப்புகள்
இதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த உயிரிழப்புகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.