ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் உள்ளிட்ட 58 பேர் காயம்
ஐக்கிய அருபு அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 58 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் தாக்குதல்கள் தொடங்கிய நேற்றைய தினம் முதல், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தமது வான்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஐக்கிய அரசு அமீரகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததுடன், 58 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இலங்கை நாட்டவர்களும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 165 ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 152 ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும், 13 ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும்் மேலும் 2 க்ரூஸ் ஏவுகணைகள் தடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் நாள் தாக்குதல்களில் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதுடன், 8 ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களான மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், எமிராத்து, எகிப்து, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, அசர்பைஜான், யேமன், உகாண்டா, எரித்திரியா, லெபனான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
தடுக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் சிதைவுகள் பல பகுதிகளில் விழுந்ததால் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சிறிய முதல் மிதமான அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam