வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் 108 கும்ப சங்காபிஷேகம் (Photos)
வவுனியா வடக்கு, ஒலுமடு - வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் 108 கும்ப சங்காபிசேகம் இன்று (10.05.2023) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

108 கும்ப சங்காபிசேகம்

அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளவும் தெய்வ திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு நாட்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (10.05.2023) 108 கும்ப சங்காபிசேகம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 7 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan