வெடுக்குநாறி மலை ஆலயத்தை உடைத்தது தமிழ் எம்.பிக்கள்! காரணத்தை வெளியிட்ட அமைச்சர்
யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அடிப்படை காரணம்
மேலும் கூறுகையில்,“வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது எமக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகள் தமக்கான வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது. அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர்.
இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருக்க வேண்டுமெனில் அரசியல்வாதிகள் அனைவரையும் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நீக்க வேண்டும். எம்மை இனவாதிகளென கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை.
இவ்வாறான மத விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனில் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தலாம். ஆனால் அனைவரும் மூத்தோர் என்ற அடிப்படையில் எம்மால் ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியுமல்லவா?
அரசியல்வாதிகளிடம் ஒழுக்கம்
இந்நாட்டில் ஒழுக்கம் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கம் இல்லை. அரசியல்வாதிகளிடம் ஒழுக்கமும், சகிப்புத்தன்மையும் செல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் அங்கு செல்கின்றன. வாக்குகளுக்காக அனைவரும் இவ்வாறு செயற்படுகின்றனர்.
மாறாக மக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை. இவை அரசியல் விளையாட்டுக்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.அதன் காரணமாகவே அம் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
எனவே அரசியல்வாதிகளிடம் ஒழுக்கம் காணப்பட்டால், ஏனையோருக்கிடையிலும் சகிப்புத்தன்மையை உருவாக்க முடியும். இவை இந்து மற்றும் பௌத்தவாதங்களின் அடிப்படையாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விளையாட்டுக்களை விளையாட வேண்டாமென அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
தையிட்டி விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெறும். அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும். உண்மைகளை அறியாமல் என்னால் எதனையும் கூற முடியாது.”என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
