சர்ச்சைக்குரிய யாழ்.தையிட்டி விகாரை விவகாரம்: காணி உரிமையாளர்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை(Photo)
யாழ்.தையிட்டி பகுதியில் அனுமதியின்றி கைப்பற்றப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்து தருமாறு காணி உரிமையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நிலங்களுடன் தொடர்புடைய காணி உரிமையாளர்களால் (12.03.2021) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தையிட்டி தெற்கு J/250 பிரிவில் இராணுவத்திற்காக கட்டப்படும் விகாரைக்கு அருகாமையில் இருக்கும் தனியார் காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பதால் நாங்கள் மீள் குடியேற முடியாத நிலையிலுள்ளோம்.

காணியை மீட்பதற்கான ஒழுங்குகள்
இதேவேளை இந்த கடிதத்துடன் காணி உறுதிப்பத்திரங்களின் பிரதிகளையும் இணைத்துள்ளோம்.
எனவே இந்த காணிகளை மீட்டு தருவதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்” என விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan