வெடுக்குநாறி மலை விவகாரம்! அரசாங்கத்தின் முக்கிய நகர்வில் மறைந்துள்ள உண்மைகள் (Video)
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தொல்லியல் திணைக்களம் எதிர்ப்பு காட்டவில்லையெனவும், தொல்லியல் திணைக்களம் வெடுக்குநாறி மலை விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பவில்லை எனவும் அத் தீர்மானங்கள் இரண்டும் ஓர் அரசியல் தீர்மானம் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேபோல தையிட்டி விவகாரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமும் ஓர் அரசியல் தீர்மானம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள - பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு - கிழக்கில் கடந்த 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுமுடக்கம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது பொதுமுடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது, எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
எனவே ஜனாதிபதியின் இக் கருத்தின் பின்னணியில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவித்துள்ளார். அவை தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
