தமிழர் தாயக பொதுமுடக்க கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றம்: ஜனாதிபதி
பொதுமுடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது, எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள - பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு - கிழக்கில் கடந்த 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுமுடக்கம் முன்னெடுக்கப்பட்டது.
மக்களின் பேராதரவுடன் இப் பொதுமுடக்கம் வெற்றி பெற்றது.
பொதுமுடக்கம்
இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பொதுமுடக்கத்தை ஒரு தரப்பினர் வெற்றி என்று சொல்வார்கள். மற்றொரு தரப்பினர் தோல்வி என்பார்கள்.
ஆனால், பொதுமுடக்கத்தை அமைதியாக மக்கள் முன்னெடுத்தார்கள்.
அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
