இலங்கை வரலாற்றை ஆய்வு செய்ய ரணில் எடுக்கவுள்ள நடவடிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka
By Mayuri Apr 29, 2023 06:34 AM GMT
Report

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாச்சார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த (27.04.2023) நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், முதலில் இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்ததற்கும், றோயல் ஆசிய சங்கத்தின் (RAS) நூல்களின் சில மூலப்பிரதிகளை எனக்கு வழங்கியதற்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்

இந்தப் புத்தகங்களின் ஏராளமான மூலப் பிரதிகள் எனது தாய் சேர்த்து வைத்திருந்த புத்தகளிடையே இருந்தன. அப்பிரதிகளை பல நிறுவனங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, போராட்டத்துடன் அந்த புத்தகங்களும் அழிக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்ய ரணில் எடுக்கவுள்ள நடவடிக்கை | Sri Lanka History Ranil Wickramasighe Step

எனவே போராட்டம் தொடர்பில் இங்குள்ளவர்களுக்கு இருந்த அச்சத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கையில் உள்ள றோயல் ஆசிய சங்கம் மற்றும் கல்கத்தா கிளை ஆகியவை இந்த துணைக்கண்டத்தின் வரலாற்றை பதிவு செய்வதில் பெறுமதி மிக்க சேவையை ஆற்றியுள்ளன.

பிரதம நீதியரசர் அலெக்சாண்டர் ஜோன்சன், ஜோர்ஜ் டர்னர் மற்றும் கல்கத்தாவில் மிகவும் பிரபலமான வின்சென்ட் போன்றோர் நமது வரலாற்றை மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றையும் ஆராய்வதில் மிகச் சிறந்த பணியைச் செய்தார்கள் என்று நினைக்கிறேன். நாம் பதிவு செய்துள்ள வரலாறு இந்தியாவிற்கு இல்லை.

நமது மகாவம்சத்தைப் போலவே, அரசியல் விமர்சகர்களும் எழுதப்படாத வரலாற்றை ஆராய்ந்தே இந்திய வரலாற்றை விளக்குகிறார்கள். இருப்பினும் வரலாற்றுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. அந்த வரலாற்றை நாம் தொடர வேண்டும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

வரலாற்றை ஆராய்தல்

மேலும், அந்த வரலாற்றைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றை ஆராய்வதன் மூலம் வருங்கால வரலாற்றை பாதுகாக்கும் றோயல் ஆசிய சங்கத்தின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய பணியாகும். றோயல் ஆசிய சங்கத்தின் சில சஞ்சிகைகளின் மூலப் பிரதிகளைப் படித்திருக்கிறேன்.

இலங்கையின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் டி அல்விஸ் மற்றும் இராமநாதன் மற்றும் அருணாச்சலம் போன்ற சிறந்த மனிதர்களின் புகைப்படங்களும், ஏராளமாக இங்கு உள்ளன. இது உண்மையிலேயே மிகச்சிறப்பான செயல். எனவே நான் முதலில் செய்ய விரும்புவது வரலாற்றுக்கான ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்குவது தான்.

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்ய ரணில் எடுக்கவுள்ள நடவடிக்கை | Sri Lanka History Ranil Wickramasighe Step

எனது பதவிக்காலம் முடிவதற்குள் இது குறித்து கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும். அதற்காக பல்கலைக்கழகங்கள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் றோயல் ஆசிய சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாட வேண்டிய இறுதி வரைவை நாங்கள் தயாரித்து வருகிறோம்.

எதிர்காலத்தில் இந்தத் துறையின் பணிகளுக்கு நிதி மற்றும் அரசாங்க ஆதரவை நாங்கள் வரலாற்று நிறுவனம் மூலம் வழங்குவோம். முதலில் நூலகங்களின் நிலையை ஆராய்ந்து பாதுகாக்க வேண்டும். றோயல் ஆசிய சங்கத்தின் நூலகங்களையும் அவதானிக்க வேண்டும்.

அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஆவணக் காப்பகம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பொது நூலகத்தில் உள்ள ஆவணங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் எனது தாத்தா, பெர்கியுசனின் எழுத்துக்களின் தொகுப்பொன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினார்.

வெளியிடப்படாத ஆய்வறிக்கைகள்

மேலும் ஒபேசேகரர்கள், பல்கலைக்கழகங்களுக்கு மற்றுமொரு தொகுப்பை வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் ஒன்றுசேர்க்க வேண்டும். மேலும், பல பல்கலைக்கழகங்களில் வெளியிடப்படாத ஆய்வறிக்கைகளை உள்ளன. அவை அனைத்தையும் நாம் சேர்க்க வேண்டும். இதுபோன்ற பல வரலாற்று நிகழ்ச்சிகளை நாங்கள் செய்யவேண்டியுள்ளன.

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்ய ரணில் எடுக்கவுள்ள நடவடிக்கை | Sri Lanka History Ranil Wickramasighe Step

இதற்கு முதலீட்டு திட்டங்கள் தேவை என்று நான் நினைக்கிறேன். பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, றோயல் ஆசிய சங்கமாக இருந்தாலும் சரி, எந்த திட்டத்தை முன்னெடுப்பது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நாம் இன்னும் ஒரு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நிதி வழங்குவது குறித்து சட்ட வரைவை தயாரிக்க வழங்கப்பட்டுள்ளது. இறுதி வரைவு கிடைத்த பின், சட்டரீதியாக அதனை கலந்துரையாடி, குழுவொன்றை நியமிப்போம்.

இந்தக் குழு மூலம் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனம் குறித்து முடிவுகளை எடுக்க முடியும். இந்த முடிவின் ஊடாக பலரை வரலாற்றை கற்க வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US