வவுனியாவில் தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்ற காட்டு யானைகள்
வவுனியா வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளன.
குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை, சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக செல்கின்ற காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டப் பயிர்களை சேதமாக்குகின்றன.
குறித்த கிராமங்களுக்குள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த தென்னைபயிர்களை நாசமாக்கிச் சென்றுள்ளன.
கோரிக்கை
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், எமக்கான தீர்வை எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை முன்வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எமது கிராமத்தை சுற்றி யானை வேலியை அமைத்து தருமாறு பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam