சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு! அதிரடியாக கைது செய்யப்படும் பிள்ளையானின் சகாக்கள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இறுதி அமர்வில் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுடன் பணியாற்றிய ஒருவர் தானே முன்வந்து சரணந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் கைதுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவாக சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
அத்துடன் பிள்ளையானின் மிக நெருங்கிய சகாவாக இருந்த வாழைச்சேனையை சேர்ந்த ஒருவரை சிஐடியினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பிள்ளையான், விசாரணையின் போது அவருடன் நெருக்கமானவர்கள் தொடர்பில் தெரிவித்தால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்பது தெளிவாகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
