இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் அதிர்ச்சித் தகவல்
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலை, சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்காகவே தாக்கி அழித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கென்டக்கியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக ஏன் அழித்தார்கள் என இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கப்பலைக் கைப்பற்றுவதை விட மூழ்கடிப்பது நல்லது என்று தனது ஜெனரல்களில் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறியதாக டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
2 எண்ணெய் கப்பல்களை அதிரடியாக தாக்கி அழித்தது ஈரான்! கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் - தீவிரமடையும் கள நிலவரம்..
நீர்மூழ்கிக் கப்பல்
கடந்த வாரம், இலங்கைக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் ஈரானிய கடற்படை போர்க்கப்பல் ஐரிஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 104 ஈரானிய கடற்படையினர் காணாமல் போன நிலையில், 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.
அத்துடன் 32 பேர் காயமடைந்தனர். வரலாற்றில் ஏனைய நாடுகளை விட ஈரானை கடுமையாகத் அமெரிக்கா தாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri