வவுனியா - ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
வவுனியா - ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவமானது வவுனியா, ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று (18.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம்
ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தடியில் பயணித்த வேளை வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டிடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகம் யோகராசா ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam