வீதியை ஆக்கிரமித்த தனி நபர்: போக்குவரத்து பாதிப்பு குறித்து மக்கள் விசனம்
வவுனியா, நெளுக்குளம், நேரியகுளம் பிரதான வீதியிலிருந்து சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் - உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் பிரதான வீதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பிரதான வீதியில் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலபோக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் வருடா வருடம் பிரதான வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடர்ந்து வருகிறது.
போக்குவரத்து முற்றாக பாதிப்பு
இருப்பினும் வீதியின் ஒரு பகுதியில் நெல்லை உலர வைப்பதுடன் மறு பகுதியினை போக்குவரத்து ஏற்றவகையில் விடுகின்றமையடுத்து, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
எனினும் சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் - உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் பிரதான வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதியை முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதுமையுடன் மக்கள் மாற்று வீதியூடாக செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயத்தில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் கவனம் செலுத்தி மக்களின் போக்குவரத்திற்கு இடையுறு இல்லாத வகையில் பாதையில் நெல்லை உலர வைக்க பணிக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
