வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு: சந்திரகுமார்
வவுனியாவில் அண்மை காலமாக சிறுவர் மத்தியில் போதைப் பயன்பாடுகள் மற்றும் ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர் எஸ். சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள்
முன்வரவேண்டும்.
மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் சிதைவடைந்துவிடும் எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும்.
போதைப் பொருள் பாவனை
இன்றைய நிலைமைகளில் 16 வயதிலிருந்து 22 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்லும்
மாணவர்கள் பல்வேறு போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.
அத்துடன் வவுனியாவில் அண்மைய சில காலமாக போதைப் பயன்பாடுகள் ஊசி மூலம் ஏற்றும் செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றன.
வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையம்
இவ்வாறாக சிலர் அடையாளம் காணப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
16 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களே அதிகளவில் காணப்படுகின்றனர்.
பெற்றோர்கள் அவதானம்
எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் எங்கு செல்கின்றார்கள் யாருடன் பழக்கம் வைத்திருக்கின்றார்கள் எவ்வாறான நிலைமைகளில் வீடு வருகின்றார்கள் என்ற தகவல்களை துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு எவ்வழிகளில் போதை ஊசி வழங்கப்படுகின்றன? இதை யார்? எங்கிருந்து? விநியோகம் செய்யப்படுகின்றன போன்ற விடயங்கள் பொலிஸாரால் கண்டறியப்பட வேண்டும்.
இவ்வாறு போதைப் பாயன்பாட்டில் ஈடுபடும் மாணவர்களில் தந்தையை இழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையர்களை உடைய குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் மத்தியிலே அதிகளவில் காணப்படுகின்றது.
எனவே இந்நடவடிக்கைகயைத் தடுப்பதற்கு பொலிஸார், சிவில் பாதுகாப்புக்குழுகள்,
அரச நிறுவனங்கள் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இறுக்கமான நடைமுறைகளை
மேற்கொள்ள முன்வருமாறு” மேலும் தெரிவித்துள்ளார்.





மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam
