முற்றாக முடங்கியது வவுனியா மாவட்டம்
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது.
கோவிட் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை வரை பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் மருத்துவமனைகள்
மற்றும் ஒருசில மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தது.