வவுனியா - கொழும்பு புதிய சொகுசு சேவை ஆரம்பம்: வெளியான தகவல்
வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசு பேருந்து சேவை ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்துச் சேவை, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.
புதிய பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியா சாலைக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் சாலைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது, முதற்கட்டமாக ஒரு வழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வில் வவுனியா சாலையின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam