வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு : நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அடையாள அணிவகுப்பு இன்றைய தினம் (8) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸாரின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமையால் அடையாள அணிவகுப்பை நடத்த வேண்டாம்” என்ற கோரிக்கை சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரதான சாட்சி அடையாளம்
இதன்போது உயிரிழந்த இளைஞரை தாக்கியதாகக் கூறப்படும் 4 பொலிஸாரை அடையாள அணிவகுப்பில் பிரதான சாட்சி அடையாளம் காட்டியுள்ளார்.
இதனையடுத்து நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
