தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்! மற்றுமொரு முக்கிய இரகசியம் (Video)
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் தோற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது தாயுடன் சேர்ந்து ஒரு காணொளியை கேட்டதாகவும் அன்றிலிருந்து அவரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், துணைவி மதிவதனி, மகள் துவாரகா, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் போன்றவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறப்பட்டு புலம்பெயர் நாடுகளில் பெரும் தொகைப் பணம் திரட்டப்பட்டு வருகின்றது.
இவர்கள் உயிருடன் இருப்பதை தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியில் நின்ற போராளிகள் உறுதிப்படுத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த விடயங்கள் பற்றி தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் அதிர்ச்சிகரமான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாகக் கூறி சிறிதுகாலம் செயற்பட்ட அவர், உள்ளே நடைபெற்ற பல விடயங்களையும், துவாரகா விடயத்தில் பாரதூரமான ஒரு சதி நடைபெற்றுவருகின்றது என்பதையும் எப்படி அவர் கண்டுகொண்டார் என்பது பற்றியும் பல தகவல்களை இந்த காணொளியில் வாக்குமூலமாகத் தருகின்றார்...
துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan