செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு: தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை
செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை
அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் , அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள் சில வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri