வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு: பெருந்திரளாக வரும் மக்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) - வற்றாப்பளை (Vattappalai) கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள், இன்று (20.05.2024) அதிகாலை 3 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய, அதிகாலை தொடக்கம் பூஜைகள் நடத்தப்பட்டு வருவதுடன் மக்கள் பெருந்திரளாக வருகை தந்து தங்கள் நேர்த்திகடன்களைச் செலுத்துகின்றனர்.
நேர்த்திக் கடன்கள்
இதன்போது, காவடி, பறவைக்காவடி மற்றும் பாற்செம்பு போன்ற நேர்த்திக்கடன்களினை நிறைவேற்றுவதில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமாத்திரமன்றி, அதிகாலையில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் எல்லா வீதிகளிலும் பக்தர்கள் கால்நடையாக ஆலயத்திற்கு சென்று நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெருமளவு பக்தர்களை உள்ளீர்த்து வைகாசிப் பொங்கல் நிகழ்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி-சதீசன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
