வற்றாப்பளையில் உடைந்துள்ள பாலம் : அசௌகரியங்களை எதிர்கொள்ளும் மக்கள்
முல்லைத்தீவு வற்றாப்பளையில் ஒரு பாலம் வெள்ளத்தினால் சிதைவடைந்து போயிருக்கின்றது. பயணிப்போருக்கு உடைந்துள்ளதை சுட்டும் வண்ணம் கற்களை அடுக்கி எச்சரிக்கை செய்துள்ளனர்.
வெள்ளத்தினால் பாலங்கள் சேதமடைவதும் அதனை மீளவும் சீரமைத்துக் கொள்வதும் வழமையானபோதும் அவை சிந்தனைத் தூண்டலையும் செய்து விடுகின்றன.
எந்தவொரு அபிவிருத்தியும் வலுவாக இருக்கும் வகையில் நீண்ட காலப் பயன்பாட்டுக்கு ஏற்ப திட்டமிடும் போது அதனால் ஏற்படும் மீள் திருத்தத்திற்கான செலவுகள் குறைக்கப்படும் என்பதும் உண்மையே.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
வற்றாப்பளை பாலத்தின் அவசியம்
முள்ளியவளையில் இருந்து வற்றாப்பளை நோக்கி செல்லும் பாதையில் வற்றாப்பளையில் முள்ளியவளை எல்லையாக இந்த பாலம் அமைந்துள்ளது.
முள்ளியவளையில் இருந்து வற்றாப்பளைக்குச் செல்லும் பிரதான பாதையும் கூட இந்த பாலம் மீதான பாதையாக அமைந்துள்ளது.
[4V7FHH
நாவல்காட்டு குளத்திற்கு சேரும் நீர் அதிகமாகும் போது வெள்ளமாகி நந்திக்கடலுக்கு செல்லும் நீரின் வழித்தடத்தில் அதனை குறுக்கறுத்து அமைக்கப்பட்டுள்ளது இந்த பாலம். இந்த பாலம் இல்லாவிட்டால் முள்ளிவளைக்கும் வற்றாப்பளைக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படும்.
நீண்ட தூரம் பயணமாகியே முள்ளியவளையை வற்றாப்பளை மக்கள் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டார்.
வற்றாப்பளை, கேப்பாப்புலவு மக்களுக்கு மிக அருகிலுள்ள நகரமாக முள்ளியவளை இருப்பதால் நகருக்கான பயணங்களை இந்த பாலத்தினூடாகவே அவர்கள் மேற் கொள்கின்றமையை சுட்டிக்காட்டியிருந்தார் வற்றாப்பளை வாசியொருவர். அவர் முள்ளியவளையில் வியாபாரத்திற்காக தினம் சென்றுவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலம் சிதைந்தது
இந்த பாலத்தின் சிதைவுக்கு பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாகும் என பொறியியல் துறையில் பணியாற்றும் சிலருடனான சுட்டிக் காட்டல்களின் போது அவர்கள் இது பற்றி குறிப்பிட்டிருந்தனர். வழமைக்கு மாறாக இந்த முறை வெள்ள நீரினளவு அதிகமானதால் பாலத்தின் உடைவு இலகுவாக்கப்பட்டு விட்டது.
நீரோட்டத்தினால் பாலத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட விசையை தாங்குமளவுக்கு பாலத்தின் கட்டுமானம் இல்லாதது தான் இதற்கு காரணமாகியுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். பாலத்தின் நீர் உள் நுழையும் பகுதியில் நீர்க்குழாய் ஒன்று நுழைவாயிலை வழிமறித்திருப்தும் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. அந்த நீர்க்குழாய் நீரோட்டத்திற்கு இடையூறாக அமைந்துவிட்டது.
பாலத்நினூடாக வெளியேறவேண்டிய நீரினளவை இது குறைத்து விட்டதால் வெள்ள நீர் பாலத்தை விட்டு விலகி வீதியை மேவி பாய்துள்ளது. இந்த பாய்ச்சலே பாலத்தினை பாரியளவிலான சேதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
மீண்டும் பாலத்தினை சீர்செய்யும் போது நீண்டகால பாவனைக்கு ஏற்றால் போல் திட்டமிடுதல் வேண்டும் என விளக்கியிருந்தனர்.
நீர் வழங்கல் பிரிவினரின் பொறுப்பற்ற செயல்
மக்களுக்கான குடிநீர்த் தொகுதிகளை ஒழுங்கமைக்கும் போது நீர் கொண்டு செல்லும் குழாய்களை பாலங்களின் ஊடாக கொண்டு செல்லும் போது பேணப்படும் முறைகளை கருத்திலெடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வற்றாப்பளை பாலத்தின் நீர் உள் நுழையும் பக்கத்திலும் நீர் வெளியேறும் பக்கத்திலும் இரு நீர்க் குழாய்கள் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. வெளியேறும் பக்கத்தில் இரும்புக்குழாய் உயரமாக பொருத்தப்பட்டுள்ளது .மற்றைய பக்கத்தில் நீலநிற பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த குழாய் நீர் செல்லும் பாலத்தின் வழிகளை மறித்த வண்ணம் இருப்பதானது அதனூடாக பாயும் வெள்ளத்தின் அளவை தடுத்து செல்லும் நீரினளவை குறைத்து விடுகின்றது என சுட்டிக் காட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரிய பாலம் வேண்டும்
பலமுறை இந்த வீதியின் இந்த பாலம் உள்ள பகுதி சேதமாவதாக தன் நினைவுகளை வற்றாப்பளை வாசியொருவர் தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சிறிய பாலமாக இருப்பதால் இந்த சிக்கல் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிப் போகின்றது. ஆறு துளையுடைய சிறிய பாலக் கட்டமைப்பையே இங்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
இது அகலமான நீரோடும் வழித்தடமாக இருப்பின் அல்லது நீளமான பாலமாக இருப்பின் அளவுக்கதிகமான நீரோட்டம் ஏற்படும் போது உடைவடைவதை தடுக்கலாம்.
இந்த பாலம் இனி எப்போது சீராக்கப்படும் என்பது கேள்விக்குறியே!
இந்த பாலத்தினைப் போல பல இடங்களில் பாலங்களும் வீதியின் பகுதிகளும் வெள்ளத்தினால் சிதைந்துள்ளதை குறிப்பிடலாம். உரிய தரப்பினர் கருத்திலெடுத்துச் செயற்படுதல் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறுவதைத் தடுத்துவிடும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |