அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மோசமடையும் காலநிலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 'வளிமண்டல நதிகள்' (Atmospheric Rivers) எனப்படும் சக்திவாய்ந்த வானிலை மாற்றத்தால் பெய்து வரும் கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினமான நேற்று (25) வரை இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சென் டியாகோவில் மரம் விழுந்ததில் ஒருவரும், ரெடிங் நகரில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட போது ஒருவரும், மென்டோசினோ கடற்கரையில் இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.
டிட்வா புயல் உருவாகிய பாதையில் உருவாகவிருக்கும் புதிய காற்றுச் சுழற்சி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அணுகல் துண்டிப்பு
இந்தக் கனமழையினால் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் சில பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் வீதி அணுகல் துண்டிக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.

லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ உள்ளிட்ட தெற்கு கலிபோர்னியா மாவட்டங்களில் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் அவசரநிலையை (State of Emergency) அறிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயினால் தாவரங்கள் அழிந்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்தப் பலத்த மழை மற்றும் காற்று வெள்ளிக்கிழமை (26) வரையிலும் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென் ஜோஸ் அருகே காற்றின் வேகம் மணிக்கு 160 கி.மீற்றருக்கும் மேல் பதிவாகியுள்ளது.
விடுமுறை காலப் பயணங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்றும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மீட்புப் படையினர் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலா செய்த விஷயத்தால் அவர் மீது கோபத்தை காட்டிய பல்லவன், ஷாக்கில் குடும்பம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri